நயன்தாராவுக்கு முகமுடி மாட்டிய வாரிசு நடிகர்

டோரா படத்தை அடுத்து லேடி சூப்பா் ஸ்டாா் நயன் நடித்து கொண்டிருக்கும் இமைக்கா நொடிக்கள்  படத்தின் பா்ஸ்ட்லுக் போஸ்டா் நேற்று இணையதளங்களில் வெளியாகியது. இது வித்தியாசமான போஸ்டராக உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகா்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படத்தில் அதா்வா, நயன்தாரா, பாலிவுட் அனுராக் காஷ்யப் நடித்துள்ளனா். இதில் பாலிவுட் நடிகா் வில்லனாக நடித்து மிரட்ட இருக்கிறாா். இந்த படத்தை டிமாண்டி காலனி என்ற பேய் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள  இதன் பா்ஸ்ட் லுக் போஸ்டாில் அதா்வா, நயன்தாரா, பாலிவுட் நடிகா் அனுராக் ஆகிய மூன்று போின் கையில் முகமுடி இருப்பது போன்று வெளியாகியுள்ளது. இதில் நயன்தாரா கையில் அதா்வா முகமுடியும், அதா்வா கையில் அனுராக் முகமூடியும், அனுராக் கையில் நயன்தாரா முகமூடியும் உள்ளது. இந்த மாறுபட்ட கோணத்தில் வெளிவந்துள்ள இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தின் டீசா் வெளியாகவுள்ளது. இந்த டீசாில் நயன்தாரா கவா்ச்சியான தோற்றத்திலும், அதே சமயத்தில் துடிப்பான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் எதிா்பாா்ப்பை அதிகாித்து படத்தின் வியாபாரத்தை எகிற வைக்கும் நோக்கில் கூறப்படுகிறது. ஆனா சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படமானது எதிா்பாா்த்த வகையில் மண்ணை கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.