Connect with us

முக்கிய செய்திகள்

இமைக்கா நொடிகள்: திரை விமர்சனம்

Published

on

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் இந்த இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப், ராஷி கன்னா, விஜய் சேதுபதி என நட்சத்திரங்களை வைத்து படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் அஜய்.

பொதுவாக நயன்தாரா படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு்ம். அந்த வகையில் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை அலசுவோம். சிபிஐ அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. நியாத்தை நிலைநாட்ட தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பெண் சிபிஐ அதிகாரி. அவருக்கு துணையாக வரும் தம்பியாக அதர்வா நடித்துள்ளார்.

நயன்தாராவின் காதல் கணவர் விஜய் சேதுபதி. இவரை நயன்தாராவின் கண் எதிரே குடிபோதையில் சிலர் கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்கின்றனர். அவர்களை பழிவாங்க தனது சிபிஐ பதவியை பயன்படுத்தி அதிரடியில் இறங்குகிறார் நயன். ஆனால் அவரது அதிரடியால் தனது புகழ் குறைகிறது என்பதால் லோக்கல் என்கவுண்டர் புகழ் இன்ஸ்பெக்டர் அனுராக் காஷ்யூப் நயன்தாராவுக்கு எதிராக களம் இறங்குகிறார். இதனால் நயன்தாராவின் தம்பி அதர்வாவும் பாதிக்கப்படுகிறார். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் முழுவதும் இரத்தமும், துப்பாகி சத்தமுமாக இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் நம்மால் யூகிக்க முடியாத வகையில் சில டுவிஸ்ட்கள் உள்ளது. இது படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. ஆனால் விறுவிறுப்பான கதையில் தேவையில்லாமல் அதர்வாவுக்கும், ராஷி கன்னாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது படத்துக்கு பலவீனம். அதர்வாவின் காதல் காட்சிகளை குறைத்து 2.50 மணி நேர படத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.

நயன்தாரா, அனுராக் காஷ்யூப் இடையே நடக்கும் காட்சிகள் படத்தில் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. நம்மை இருக்கையின் நுனிக்கே வரவைக்கிறது. பாடல்களில் ஹிப்ஹாப் ஆதி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலும், பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டுகிறார். இது படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம்.

நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக படம் முழுவதும் துப்பாக்கியும் கையுமாக வலம் வரும் நயன்தாரா விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார். வில்லன் அனுராக் காஷ்யூப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அந்த அளவுக்கு படத்தில் அவரது தாக்கம் உள்ளது. சைக்கோ கில்லராக வரும் அனுராக் மிரட்டல். விறுவிறுப்பான படத்தில் அதர்வாவின் காதல் காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. அது படத்துக்கு பலவீனமாக உள்ளது. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 2.50 மணி நேரம் உள்ள நீளமான படத்தில் முழுவதும் ரத்தமும், துப்பாக்கி சத்தமும் வருவது சற்று முகம் சுளிக்க வைக்கிறது. மொத்தத்தில் இமைக்கா நொடிகள் விறுவிறுப்பான நொடிகள்.

ரேட்டிங்: 3/5

செய்திகள்31 mins ago

5 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – கைகொடுத்த அதிர்ஷ்டம் !

செய்திகள்2 hours ago

பழுதாகி நின்ற வாகனங்கள் … பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள் – கலப்பட பெட்ரோலால் குழப்பம் !

செய்திகள்2 hours ago

ஒரு தலை காதல்… பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் – இது என்ன சினிமாவா ?

செய்திகள்3 hours ago

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் – கொலை செய்து புதைத்த கும்பல் !

செய்திகள்3 hours ago

ஆட்டோவில் ஏற்றிய சூட்கேஸில் துர்நாற்றம்… சந்தேகம் அடைந்த ஓட்டுனர் –தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம் !

ஜோதிடம்4 hours ago

இன்றைய ராசிபலன்கள் 11.12.2019

sumo
செய்திகள்15 hours ago

தமிழ்படம் சிவாவின் அட்ராசிட்டி -‘சுமோ’ பட டிரெய்லர் வீடியோ…

darbar3
செய்திகள்19 hours ago

28 வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் நடிகை – தலைவர் 168 அப்டேட்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending