NGK

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் என்.ஜி.கே திரைப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

கடந்த ஒரு வருடமாக என்.ஜி.கே திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் நோட்டா படத்தில் வெளிவந்துவிட்டதால், சில காட்சிகளை மாற்ற வேண்டியிருந்தது. எனவே, படப்பிடிப்பு நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் சூர்யா பொறுமை இழந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க பாஸ்-  படப்பிடிப்பில் பயங்கர விபத்து - விஷாலுக்கு என்ன ஆச்சு?

இந்நிலையில், என்.ஜி.கே. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. அதேபோல், போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளும் ஒருபக்கம் துவங்கியுள்ளது. அநேகமாக கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அரசியல் கலந்த திரில்லர் படமாக என்.ஜி.கே உருவாகியுள்ளது. “என்.ஜி.கே ஒரு சிறந்த அனுபமாக இருந்தது. சூர்யாவின் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு அபாரம். அவருக்கு நன்றி” என செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  சசிக்குமாருக்கு நோ சொன்ன விஜய்.. எஸ் சொன்ன சூர்யா......

எனவே, என்.ஜி.கே. பற்றிய புதிய அப்டேட் வெளியாகும் எனத்தெரிகிறது.