குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி ஆண்மையை இழந்த ஒரு நபர் பள்ளி ஆசிரியையான தனது மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூரை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு 45 வயதாகியும் திருமணமாகாததால் அவருக்கு 41 வயதான காந்திமதி என்ற பள்ளி ஆசிரியை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து பரமசிவம் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியதால் அவருக்கு ஆண்மை இல்லை என்பது தெரியவர கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் மனைவி காந்திமதி மீது பரமசிவத்துக்கு சந்தேகம் ஏற்பட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு காந்திமதியை கொலை செய்ய முடிவெடுத்து அவரை அடித்து மயக்கமடைய வைத்துள்ளார். பின்னர் கழுத்தை காலால் மிதித்து கொன்றுள்ளார். இதனையடுத்து பிளேடால் உடல் முழுவதையும் கீறி சாக்குமூட்டையில் கட்டி அருகில் உள்ள புதர் பகுதியில் வீசியுள்ளார்.

ஆனால் உடலின் சில பகுதிகளை வீட்டில் உள்ள குளியலறையில் பரமசிவம் விட்டுச்சென்றதால் அதிலிருந்து துர்நாற்றம் வெளியில் வரத்தொடங்கியதால் வீட்டு உரிமையாளர் சந்தேகப்பட்டு போலிசுக்கு தகவல் கொடுத்ததால் பரமசிவம் சிக்கியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த நிலை தற்போது அவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்றதால் கூடதலாக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.