நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான இம்ரான் தாக்கூர் தனது டுவிட்டரில் பாட்ஷா பட பாணியில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:

‘போட்டி உனக்கும் எனக்கும்தான். இந்த மாணிக் பாட்ஷாவுக்கும் ஆண்டனிக்கும்தான். தேவை இல்லாம கடைசியில இருக்குற டீம்கிட்ட உன் வீரத்தை காட்டாதே. முடிக்கிறேன். எண்ணி 2 நாள்ல்ல உன்னை முடிக்கிறேன் குவாலிஃபையர்ல்ல. ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. எடுடா வண்டியை போடுடா விசிலை என்று பதிவு செய்துள்ளார்.

இம்ரான் தாகூரின் இந்த டுவீட் எந்த அணியை குறிப்பிட்டுள்ளது என்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த டுவீட்டை சிஎஸ்கே ரசிகர்கள் வரவேற்றும், மற்ற அணிகளின் ரசிகர்கள் விமர்சித்தும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.