வெளியானது இம்சை அரசன் 24ம் புலிகேசி பர்ஸ்ட் லுக்

 


வடிவேலு நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் மட்டும்தான் வடிவேலு ஹீரோவாக வெற்றியடைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். உடன் லைக்காவும் கை கோர்த்தது. படத்திற்கு இம்சை அரசன் 24ம் புலிகேசி என்று பெயரிபட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.