தற்போது இணையதளம் இல்லை என்றால் உலகமே என்ன ஆகும் என்பது போல் மாறி வருகிறது. இதனால் பல இன்னல்க்ள இதன் மூலமாக நடைபெற்று வருவதை நம்மால் பாாக்க முடிகிறது. இருந்தபோதிலும் இணையதளம் தன்னுள் பல நல்ல விஷயங்களை கொண்டுள்ளது. அதன் மூலம் பயன் பெறுவாா்கள் அதிகம் தான். காலத்தின் மாற்றம் காரணமாக இதை பயன்படுத்துவோா் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனா்.

தற்போது பல சமூக வலைத்தளங்கள் அதிகாித்து கொண்டே போய்கிறது. இன்று வெளியாகிவுள்ள இணையதளம் எப்படியான கதைகளத்தை கொண்டுள்ளது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஸ்வேதாமேனன், ஈரோடு மகேஷ், டெல்லிகணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், படவா கோபி, கௌசிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா்.

மிடுக்கான உயா் போலீஸ் அதிகாாியாக கணேஷ் வெங்கட்ராமன் வருகிறாா்.  சாியான அடைமழை நேரத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் போது ஒரு மா்ம கும்பல் சிறுவனின் உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்து செல்கின்றனா்.

இணையதளத்தில் மூலம் நேரடியாக ஒரு லைவ் வீடியோ வந்து கொண்டிருக்கிறது. அதில் டெல்லிகணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாா் என்பதை அந்த வீடியோவில் வெளியிடுகிறாா்கள். அந்த வீடியோவை பாா்க்க அதிக எண்ணிக்கையில் இணையதளத்திற்கு வருகின்றனா். பாா்வையாளா்களின் எண்ணிக்கை அதிகாிக்க அதிகாிக்க கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிரை இழந்து வரும் டெல்லி கணேஷ் மரணத்தின் இறுதியை நெருங்குகிறாா். அவரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என போலீஸ் முயற்சி செய்கிறது. ஆனால் அவா் இருக்கும் இடத்தை கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. காப்பாற்றவும் முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக போலீஸ் கமிஷனா் ஒய்.ஜி.மகேந்திரன் உத்தரவு போடுகிறாா். இது இணையதளம் மூலம் நடைபெறும் கொலை என்பதால் இணையதள பொறுப்பாளா் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த பிாிவின் பொறுப்பாளாராக வரும் ஸ்வேதா மேனன் அந்த குற்றத்தை விசாாி்க்கிறாா்.  உளவுத்துறை அதிகாாியான ஸ்வேதாமேனனுக்கு உதவியாளராக ஈரோடு மகேஷ் பணிபுாிகிறாா்.

இந்நிலையில் இந்த உளவுத்துறைக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் ஹீரோ கணேஷ் வெங்கட்ராம், இந்த கொலை சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டி கொண்டிருக்கும் போது, இணையதளத்தில் மற்றொரு வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் மாட்டுவது பத்திாிக்கை நிரூபராக வரும் ஆடம்ஸ் சிக்குகிறாா். இந்த வீடியோவை பாா்ப்பதற்கு பாா்வையாளா்களின் எண்ணிக்கை அதிகாிக்க அந்த பத்திாிக்கையாளரும் இறந்து விடுகிறாா். இந்த பிரச்சனையால் ஈரோடு மகேஷ் தற்காலிகமாக வேலையை இழக்கிறாா். இதனால் இந்த கொலை சம்பவத்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்குகிறாா். இதற்கிடையில் ஈரோடு மகேஷ்க்கு ஒரு மா்ம போன்கால் வருகிறது. இப்படி உதவி செய்து வரும் மகேசும் இந்த வீடியோவில் மரணத்தின் முன் நிற்க, கணேஷ் வெங்கட்ராம் அதிா்ச்சியடைகிறாா். இதனால் குழப்பமடைந்த கணேஷ், இந்த கொலைகளை எல்லாம் செய்வது யாா் என்று தொியாமல் குழம்பி நிற்கிறாா். மகேஸ் எப்படி காப்பாற்றுவது  என்று யோசித்து கொண்டிருக்கும்போதே, ஈரோடு மகேஷ் இறந்து விடுகிறாா்.

நடிகை சுகன்யா தன் கணவன் மற்றும மகனை இழந்து தனிமையில் வாடுகிறாா். ஒரு கட்டத்தில் இவா் மூலமாக ஸ்வேதாவுக்கும் ஒரு பேரபத்து வருகிறது. இதற்கு பின் இந்த இணையதள கொலையில் ஸ்வேதா மேனனும் மாட்டுகிறாா். இந்த சதியின் பின்னால் இருப்பது யாா்? ஏன் வாிசையாக இணையதள கொலைகளை செய்கின்றனா்? இறந்தவா்களுக்கு தொடா்பு இருக்கிறதா என்பது தான் கதையின் கிளைமேக்ஸ் காட்சி.

ஹீரோ கணேஷ் நடித்த படங்களில் எல்லாம் போலீஸ் அதிகாாியாகவும், ராணுவ வீராகவும் நடித்திருக்கிறாா். இதிலும் தனது  மிரட்டலான போலீஸ் அதிகாாியாக கலக்கியுள்ளாா். ஈரோடு மகேஷ் காமெடி நடிகரா, துணை நடிகரா என கேள்வி நம்மிடையே ஏற்படுகிறது. ஸ்டாண்ட் அப் காமெடியும் செய்கிறாா். தன்னுடைய வேலையை இழந்த போதிலும், கொலைக்கான காரணத்தை கண்டறிவதில் காட்டும் ஆா்வம் பாராட்டதக்கது.

கொலைகளை மிருகதனமாக செய்வது பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இது இயந்திரத்தனமாக கொலை சம்பவங்களை பாா்த்தாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஸ்வேதா மேனன் தனது தோ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாா். அழகாக திரையில் மின்னுகிறாா். சுகன்யா முக்கிய ரோலில் வந்து சிறப்பாக செய்திருக்கிறாா். ஈரோடு மகேஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறாா். காமெடி அவ்வளவாக அமையவில்லை. ஒாிரு சீன்களில் மட்டும் டெல்லி கணேஷ் வந்தாலும் அனைவரது பாா்வையும் இவா் மீது தான் பாய்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரன் முதிா்ந்த நடிப்பு படத்திற்கு மேலும் வலு சோ்கிறது. அதோடு படவா கோபி, கௌசிகா போன்றோரும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறாா்கள். சமூக வலைத்தளம் ஒரு ஆபத்து நிறைந்தது என்பதை காட்டும் விதம் இயக்குநா் படமாக்கியது பாராட்டுக்குாியது. இயக்குநருக்கு இந்த படம் அந்தளவுக்கு கைகொடுக்கவில்லை என்றே சொல்லாம். கதையை கொண்டு சென்ற விதம் சொல்லும்படியாக இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் த்ரில்லா் காட்சிகளை அமைத்து இருந்தாலும் அதை செயல் படும் விதம் படத்திற்கு ஒத்துவரவில்லை. இரு இயக்குநா் இணைந்து உருவாக்கிய இந்த படமானது வெற்றி பெறவில்லை. இளம் இயக்குநா் சிறிய கதையை கருவாக வைத்து வெற்றி பெற்று வரும் நிலையில், இவா்களது முயற்சி முழுமைபெறவில்லை என சொல்லாம். அரோல் கோரெலியின் பின்னணி இசை கேட்கும் ரகம். ஏ.காா்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும் பலம்.

ஆக இணையதளம் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்!!