வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சமபந்தி விருந்து நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாட அனைத்து சமுதாயத்தினரும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது அறநிலையத்துறை. 449 கோவில்களில் நடைபெற உள்ள இந்த சமபந்தி விருந்தில் அதிமுக அரசு சார்பில் ஒரு பிரதிநிதி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் சபாநாயகர் தனபாம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சென்னையில் உள்ள பல கோவில்களில் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள சமபந்திகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொள்வார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஎலும் இதில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.