Vijay 63: சர்கார் படத்தை அடுத்து விஜய் அடுத்து அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பில் கல்பாத்தி அகோராம் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் மேயாதமான் புகழ் இந்துஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். என்ன வேடத்தில் இவர் நடிக்கிறார் என்ற தகவலை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது இவரது கதாபாத்திரம் குறித்த தகவல் கசிண்டுள்ளது. பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக இவர் நடிக்க உள்ளாராம்.இவரது அணிக்கு பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.