இந்தியா இங்கிலாந்துன் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து இந்த தொடரில் முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டி இந்தியாவுக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இதில் வெற்றிபெற்றால் இங்கிலாந்தை சமன் செய்துவிடலாம்.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது, இந்தியா 19 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா இங்கிலாந்து அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்று 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 6 ரன்னுடன் உள்ளது.

இந்தியா தரப்பில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற கேப்டன் கோலி மற்றும் புஜாரா சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கோலி 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் புஜாரா பின்வரிசை வீரர்களுடன் கூட கைகோர்த்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அனைத்து விக்கெட்டுகளும் விழ புஜாரா மட்டும் கடைசி வரை களத்தில் நின்று 132 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டையும், பிராட் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மூன்றாவது நாளான இன்று தான் ஆட்டத்தின் முக்கியமான சவால் உள்ளது. இன்றைய நாளில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்வது சற்று கடினம். அதற்கேற்றார்போல இந்திய அணி இன்று இங்கிலாந்தை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்தினால் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கொடி நாட்டுமா அல்லது கோட்டைவிடுமா என்பது இன்று தெரியும்.