பாகிஸ்தான் கடல் பகுதிக்கு அத்துமீறி நுழைந்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட அரபுக்கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாக் கடல் பகுதியில்  அத்துமீறி நுழைந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.