உலகில் மிக பிரபலமான, பெரிய மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒன்பது ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளை வாங்கி, அதன் மென்பொருளை சமீபத்தில் ஆய்வு செய்துள்ளது.

அந்த நாடுகளில் இந்தியாவும் உள்ளது. கடந்த மே, ஜூலை மாதங்களில் தொடரப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 166 கணினிகளை 9 ஆசிய நாடுகளில் வாங்கி உள்ளது. அதில், இந்தியாவில் இருந்து 22 கடைகளில் கணினிகளை வாங்கி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  கோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை!

இந்தியாவில் இருந்து வாங்கப்பட்ட 22 கணினிகளில் 20 கணினிகள் முறையாக அங்கீகாரம் பெறாத மென்பொருட்கள் பொறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவில், 9 நாடுகளில் இருந்து பெறப்பட்ட கணனிகளில் 83% முறையான அங்கீகாரம் பெறாதவை என தெரியவந்துள்ளது. மேலும், இந்த கணினிகளில் போலியான மென்பொருள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  கருத்துகணிப்பு இருக்கட்டும்! என்ன சொல்கிறது மோடி ஜாதகம்?

கணினிகளில் இப்படி போலியான மென்பொருள்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 91 சதவீதம் பெற்று முதலில் உள்ளது, இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா 90 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் அந்த கணினிகளை சோதித்து பார்த்ததில், அதில் அதிப்படியான மால்வேர் என்று அழைக்கப்படும் வைரஸ் ஊடுருவுவது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகமாகும் – கமலின் அறிவுரை !

இந்த வகையில் முறையற்ற மென்பொருட்களை கொண்டு இயங்கும் கணினிகளில் மட்டும்தான் அதிக டேட்டா திருட்டுபோவதாகவும், கடவுச்சொற்கள் திருடப்படுவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.