இன்று தொடங்க இருந்த இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை இதுவரை 17 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் அங்கு மழைப்பொழிவு இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  உலகக் கோப்பையைத் தொட்ட ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் - பங்கமாக கலாய்த்த ஸ்டார் ஸ்போட்ஸ் !

தொடர்ந்து மழைப்பொழிவு இருப்பதால் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அப்படியேப் போட்டிகள் ஆரம்பித்தாலும் ஓவர்கள் குறைக்கப்படுமா அல்லது 50 ஓவர்கள் போட்டியாக நடத்தப்படுமா எனத் தெரியவரும்.

தொடர்ந்து உலகக்கோப்பையில் மழையால் போட்டிகள் பாதிக்கப்படுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.