உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முதலாக தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1 தொகுத்து வழங்கியபோது இயக்குர் ஷங்கர், தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் இணைந்து ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சி எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

அதன்பிறகு, இப்படத்தின் தயாரிப்பு பணியாது லைகா புரொடக்ஷனுக்கு மாறியது. தற்போது, இந்த படத்தின் படக்குழுவினர் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, 1996ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை காண ரசிகர்கள் மிக ஆவலோடு உள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  பைத்தியக்கார மருத்துமனையான பிக்பாஸ் வீடு-காரணம் என்ன?

ஆனால், படம் தொடங்குவது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் சில மாதங்களாக படக்குழு அமைதி காத்தது. ஆனால் இன்று படக்குழுவில்  இருந்து அதிகாரப்பூர்வ வார்ததை நமக்கு கிடைத்துள்ளது.

கலை இயக்குநர் முத்துராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், கிக் – ஆரம்பமானது இந்தியன் 2 படத்திற்கான பணிகள் என பதிவிட்டு, படத்திற்கு பூஜை போட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  டாய்லட் கிளீனர் விளம்பரத்தில் கமல் – இறங்கிப் போவது ஏன் ?

இப்படத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து, இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.