Home சற்றுமுன் கமலுடன் முதன்முதலாக இந்தியன் 2வில் ஜோடியாகும் நயன்தாரா!

கமலுடன் முதன்முதலாக இந்தியன் 2வில் ஜோடியாகும் நயன்தாரா!

Indian 2 movie-Kamal Haasan-Shankar

கடந்த பிக்பாஸ் மேடையில் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க போவதாக கமல் அறிவித்தார். பிக் பாஸ் மேடையில் ஷங்கர் வந்து அவர் மூலம் இந்தியன் 2வில் நடிக்க இருப்பதை தெரிவித்தார் கமல். இந்நிலையில் இந்தியன் 2வில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படமானது மிகப்பெரிய ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும் இந்தியன் படம் மாஸ் ஹிட்டடித்தது. அதனால் இதன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற திட்டத்தை ஷங்கர் முன் வைத்தார். ஆனால் என்ன காரணமோ அது வெறும் பேச்சு அளவிலேயெ இருந்தது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள செய்தியை கடந்தாண்டு வெளியான பிக் பாஸ் முதல் சீசனில் கமல் அறிவித்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வியாக இருந்தது. ஏனெனில் ஷங்கர் ரஜினியை வைத்து 2.0 படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்த காரணத்தால் இந்தியன் 2 தள்ளிப்போய் கொண்டு இருந்தது. 2.0 படத்தின் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியன் 2 பட வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தபடத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்தியன் 2 படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக எந்த நடிகை தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகா்களிடையே ஏற்பட்டது. தற்போது நயன்தாராவை இந்தியன் 2வில் நடிக்க வைக்க திட்டம் இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. நயன்தாரா இதுவரை கமலுடன் ஜோடியாக நடிக்கவில்லை. அதுவும் இதன் மூலம் நிறைவேற போகிறது. கமலுடன் முதன் முதலாக இணையும் படமாக இந்தியன் 2 இருக்கும். இந்த தகவல் அவரது ரசிகா்பெருமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அறிவிப்பு படக்குழுவிடமிருந்து இன்றும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.