இந்தியன் 2 வில் கமலுடன் இணையும் பாலிவுட் நடிகர்

08:33 மணி

கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த உலகநாயகன் நடித்த இந்தியன் படமானது மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கமல் இரு வேடத்தில் நடித்திருப்பார். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் மற்றும் ஷங்கர் அறிவித்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் புதியதாக ஒரு பாலிவுட் பிரபலம் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகின்றது.

விக்ரம் நடித்த ஐ படத்தின் வெற்றிக்கு பின், சூப்பர் ஸ்டாரை வைத்து ஷங்கா் 2.0 படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடா்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் ஷங்கா். இந்த படத்தின் மீது ரசிகா்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஏன்என்றால் கமல் தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். நேற்று அரசியல் பயணத்தின் முதற்கட்டமாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயர், கொடி, கொள்கைகளை அறிவித்தார். முழு நேர அரசியல் இறங்குவதால் அதற்குள் நடித்து வரும் எல்லா படங்களை முடித்து கொடுக்க வேண்டும். அதனால் விஸ்வரூபம் 2 படமானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சபாஷ் நாயுடு படமும் பாதி படம் உருவாகி விட்டது. தற்போது இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் ஆரம்பிமாகி உள்ளதை தைவானில் இந்தியன் 2 என்ற சிறிய ரக பலூனை பறக்கவிட்ட அறிவித்தார் ஷங்கா்.

இந்நிலையில் இந்தியன் 2வில் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதிலும் அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் இளம் புயல் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே ரஜினியின் 2.0 படத்தில் அக்ஷயகுமார் நடித்துள்ளார்.அதுபோல  அஜய் தேவ்கன் இந்த படத்தின் மூலம் வருவார் என பேசப்படுகிறது. மற்ற நடிகா் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com