ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 பூஜை போடப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லை. எனவே, சில நாட்கள் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், அமெரிக்கா சென்ற ஷங்கர், அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு, கமலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது கமல்ஹாசனின் மேக்-அப்பில் ஷங்கர் திருப்தி அடைந்ததால், தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டதாக தெரிகிறது.