கமல்ஹாசன் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் துவங்கவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 பூஜை போடப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லை. எனவே, சில நாட்கள் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ஷங்கர், அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு, கமலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கவுள்ளார். அது திருப்தி ஆனவுடன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படவுள்ளது.

இந்தியன் 2-விற்கு எழுத்தாளர் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் இணைந்து வசனம் எழுதுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.