ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் கதை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் 1996ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்தியாவில் புரயோடி போயுள்ள லஞ்சம் பற்றி அப்படம் பேசியது. ஏறக்குறைய 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2-வை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18ம் தேதி தொடங்க இருக்கிறது.

முதல் பாகத்தில் இறுதியில் இந்தியன் தாத்தா சேனாதிபதி, மகன் கமல்ஹாசனை கொன்று விட்டு வெளிநாட்டுக்கு தப்பிசென்றுவிட்டதாக கதையை முடித்திருப்பார் ஷங்கர்.

இந்தியன் 2 பாகத்தின் கதை சேனாதிபதியின் இளம் வயது கதாபாத்திரம் பற்றி பேசுகிறதாம். மகனையே கொல்லும் அளவுக்கு நேர்மையாக இருக்கும் சேனாதிபதி எப்படி வளர்க்கப்பட்டார், அவரின் தாய், தந்தை, அவரது தந்தையின் இளமைக்காலம்  என பின்னோக்கி 1920ம் ஆண்டு கதை நடைபெறுவது போல் நகருகிறதாம்.  அந்த இளம் வயது கமலுக்குத்தான் காஜல் அகர்வால் ஜோடி எனத் தெரிகிறது.

குறிப்பாக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இந்தியன் 2 உருவாக்கப்பட்டுள்ளதாம். அதன் படி இயற்கை விவசாயம், செயற்கை உரங்களால் ஏற்படும் பாதிப்பு, நமது பாரம்பரிய விதைகள் மற்றும் செடிகளுக்கு வெளிநாடுகள் உரிமை கொண்டாடுவது, விவசாயம் மீதான மக்களின் அறியாமை என அனைத்தும் விவாதிக்கப்படவுள்ளதாம்.

ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து காத்திருக்கிறது…