Indian Air Force : இன்று காலை பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய ராணுவ வீரரின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படையினரால் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதில், பல தீவிரவாதிகள் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர்கள் இருவர் பலியாகி விட்டதாகவும், 3 விமானிகளை பாகிஸ்தான் கைது செய்துள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்நிலையில், வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் காயப்படுத்தி அழைத்து செல்லும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.