உலகக்கோப்பைக்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களில் 29,000 டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளதால் ஐசிசி அதிர்ச்சியடைந்துள்ளது.

மிகவும் எதிர்பார்த்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஐசிசிக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. றுதிப்போட்டியில் எப்படியும் இந்தியா தகுதி பெறும் என்று கணித்து ஏராளமான இந்தியர்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்திய அணியின் தோல்வியால் இப்போது டிக்கெட்கள் வேகமாக கேன்சல் செய்யப்பட்டு வருகிறதாம். இதுவரை 29,000 டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளதால் ஐசிசி அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் ஐசிசிக்கும் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது

அதுமட்டுமில்லாமல் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டனுக்கு பயணம் செய்ய ஏராளமான இந்தியர்கள் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுக்களையும் கேன்சல் செய்துவருகின்றனர். ஆனால் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடுவதால் இந்த டிக்கெட்கள் எப்படியாவது விற்றுவிடும் என ஐசிசி எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.