‘உன்னை போல் ஒருவன்’, ‘பில்லா 2’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சக்ரி டோலட்டி தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர்க்காலம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கேரக்டரில் தமன்னா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் பிரபுதேவா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘காமோஷி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க 8K ரெசலூசன் கேமிராவில் படமாக்கப்படவுள்ளது. இந்த வகை கேமிராக்கள் ஹாலிவுட்டுக்கு சில வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டாலும் இந்தியாவின் முதல் 8K படம் என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ள பிரபுதேவா, ”இந்தியாவின் முதல் 8K தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவுள்ளேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இதற்கு இயக்குனர் சக்ரிடோலட்டி, தயாரிப்பாளர் வாஷூ பாக்னானி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்