தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2019-20 நிதி ஆண்டுகான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வகையில் தேர்தலுக்கு ஏற்றவாறு இந்த பட்ஜெட் அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதில் தனிநபர் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்து பியூஷ் கோயல் அறிவித்தார். இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்த வருமான வரிசலுகை மூலம் ரூல் 6.50 வரை வருமானம் பெறுவோர் வரிசெலுத்த தேவையில்லை. நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டே வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் தனி நபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.