Actress Iniya : தமிழில் ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா. இதனையடுத்து ‘மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி சில மலையாள படங்களிலும் இனியா நடித்திருக்கிறார். தற்போது, இனியா கைவசம் தமிழில் ‘காபி’, மலையாளத்தில் ‘தக்கோல், பெண்களிலா’, கன்னடத்தில் ‘துரோணா’ என நான்கு படங்கள் உள்ளது.

இதில் ‘காபி’ படம் குறித்து இனியா பேசுகையில் “இந்த படத்தில் நான் ‘சத்தியபாமா’ என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதனை சாய் கிருஷ்ணா இயக்கி வருகிறார். நிச்சயம் இப்படம் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகும்” என்று தெரிவித்துள்ளார்.