பாகுபலி-2 டிரெய்லர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

08:17 காலை

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி-2 படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.

Loading...

பாகுபலி முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த விட்ட நிலையில், இதர பணிகள் நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என ராஜமௌலி கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது. அது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.

1. படத்தின் ட்ரெய்லர் 2 நிமிடம் மற்றும் 20 வினாடிகள் ஓடக்கூடடியதாக தயாராகியுள்ளது. படத்தில் உள்ள நிறைய சண்டைக் காட்சிகள் அதில் இடம் பெற இருக்கிறது.

2. இந்த ட்ரெய்லர் நாளை காலை ஆந்திராவில் உள்ள 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இணையதளத்தில் நாளை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.

3. படத்தில் இடம்பெற்றுள்ள சில அற்புதமாக கிராபிக்ஸ் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

4. இந்த ட்ரெய்லருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com