நடிகை கஸ்தூரி தனது டுவிட் பக்கத்தில் இன்று வெளியிட்ட டுவிட்டில் கூறியிருப்பதாவது. என்னை தனியார் டிவியில் இருந்து பேட்டி எடுக்க வந்தனர். அந்த பேட்டி எடுத்த பெண் மிக துடிப்பான முறையில் இருந்தார். கேமராவை வலுவூட்டும் அந்த தன்னம்பிக்கையுள்ள அந்த பெண்ணை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

மிக கடினமான இந்த வேலையில் பயணங்கள், நீண்ட நேரம் கழித்து வீடு செல்லும் நிலை, அவருடைய தொழிலில் அவர் காட்டும் இன்வால்வ்மெண்ட் முதலியவை வியக்க வைக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவரின் குடும்பம் அவரின் இந்த கடினமான வேலைக்கு அங்கீகாரம் கொடுப்பது நல்ல விசயம் என கூறியுள்ளார்.