நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு காங்கிரஸில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ். அழகிரி நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளோம். கமல்ஹாசன் எங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எங்களோடு சேர்ந்து மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

கமல்ஹாசன் இதை ஏற்று திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.