ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான கோப்பையை நேற்று மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி 4 ஆவது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசன் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தொலைக்காட்சிகளின் முன்னால் கட்டிப்போட்டது. நேற்று நடந்த ஹை வோல்டேஜ் போட்டியின் கடைசி நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தி பலருக்கும் ரத்த அழுத்தத்தை உருவாக்கி முடிந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  வெற்றிக்கு பின்னர் இம்ரான் தாஹீர் போட்ட பாட்ஷா டுவீட்

இந்த தொடரில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த வீரர்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டன. அவ்விருதுகளின் விவரம் :-

 • சாம்பியன் பட்டம் வென்ற வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி பரிசு
 • இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசு
 • மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிக்கு ரூ.10.5 கோடி மற்றும் ரூ. 8.5 கோடி,
 • எமர்ஜிங் பிளேயர்: சுப்மான் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ.10 லட்சம்,  சிறந்த கேட்ச்: கெய்ரான் போலார்டு (மும்பை இந்தியன்ஸ்) ரூ.10 லட்சம்
 • ஆரஞ்சு கேப்(அதிக ரன்கள்): டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ரூ. 10 லட்சம்
 • பர்ப்பிள் கேப்(அதிக விக்கெட்): இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ.10 லட்சம்
 • மதிப்புமிக்க வீரர் (எம்.வி.பி.,): ஆந்த்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 10 லட்சம்
 • ஸ்டைலிஸ் வீரர்: கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ரூ. 10 லட்சம்
 • சிறந்த அதிரடி வீரர் (எஸ்.யூ.வி, கார்): ஆண்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்),
 • கேம் சேஞ்சர்: ராகுல் சகார் (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 10 லட்சம்.
 • ஃபேர் ப்ளே விருது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
 • பிட்ச் மற்றும் மைதான விருது: பஞ்சாப் கிரிக்கெட் கூட்டமைப்பு,  ஹைதராபாத் கிரிக்கெட் கூட்டமைப்பு.