Home சற்றுமுன் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை போலவே ஏகபட்ட படங்கள் வந்திருந்த போதிலும் அதை கொஞ்சம் வித்தியாச படுத்தி படைத்திருக்கிறார் அறிமக இயக்குநர் மு.மாறன். இரவு நேரத்தில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. அந்த சமயத்தில் நம்ம நாயகன் வந்து மாட்டுகிறார், பின் போலீஸிசிலிருந்து தப்பித்து, அந்த கொலையை செய்தது யார், எதற்காக கொலை செய்தார், ஹீரோ அருள்நிதி அந்த கொலையாளியை கண்டுபிடித்தார என்பது தான் கதை.

இரவில் சென்னையில் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. வேறு சம்பவம் தொடர்பாக அப்போது அங்கு வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதே போல மற்றொருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் அருள்நிதியை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தததை பார்த்தாக சொல்லுகிறார். இதனால் போலீசார் அருள்நிதியை கைது செய்கின்றனர். போலீசில் இருந்து தப்பிக்கும் அருள்நிதி, நிஜ கொலையாளியை தேடி ஓடுகிறார். கொலை செய்யப்பட்டது யார் என யோசிக்கும் போது கதை பின்னோகி நகருகிறது.

கால் டாக்சி டிரைவராக பரத் தான் அருள்நிதி.அவரின் காதலி சசீலாவாக மகிமா. நர்ஸ் வேலை பார்த்து வரும் மகிமாவும் அருள்நிதியும் ஒருவரை ஒருவா் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தான் காதலி மகிமாவுக்கு உதவி செய்து நல்ல நண்பராகிறார் அஜ்மல். மகிமாவை கேலி செய்தவர்களிடமிருந்து காப்பாற்றுவதன் மூலம் தன்னை நல்லவனாக காட்டி கொள்கிறார் அஜ்மல். நல்லவன் வேசம் போட்ட அஜ்மல் தன்னை காதலிக்கும்மாறு மகிமாவை டார்ச்சர் செய்கிறார். அவரை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று வெறியில் தவறாக நடந்து கொள்கிறார்
அஜ்மல். அவரை அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார் மகிமா.

மகிமாவின் தோழியாக வரும் சாயாசிங். தனது தோழி சாயாசிங்கையும் ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிற வில்லனாக வருகிறார் அஜ்மல். இந்நிலையில் கடலில் விழுந்து சாக போகும் சாயாசிங்கை அருள்நிதி காப்பாற்றுகிறார். அப்போது தனக்கு நடந்த கொடுமையை அருள்நிதியிடம் கூறுகிறார் சாயாசிங். தன்னிடம் வில்லன் அஜ்மல் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டி வருவதாகவும் சொல்கிறார். இதனால் அருள்நிதி இந்த இரண்டு பிரச்சனைகளுக்கா அஜ்மல் தீர்த்து கட்ட முடிவு எடுத்து அஜ்மல் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஏற்கனவே கொலை நடந்து இருக்கிறது. ஒரு பெண் அங்கு கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க அந்த கொலைப்பழி அருள்நிதி மீது விழுகிறது. போலீஸ் அருள்நிதியை துரத்துவதும், அவர் கொலையாளியைத் தேடி ஓடுவதும் தான் கதை நகருகிறது. கொலை செய்ப்பட்ட சுஜா வருணியை கொலை செய்தது யார்? அவரை அருள்நிதி கண்டுபிடித்தாரா? என்பது மீதிக்கதை.

கால் டாக்சி டிரைவராக அருள்நிதி, நர்ஸ் வேலை பார்க்கும் மகிமாவை காதலிப்பது, போலீசில் இருந்து தப்பித்து கொலையாளியை கண்டுப்பிடிக்க முயல்வது, அஜ்மலுடன் மல்லுக்கட்டுவது என அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் மகிமாவுடன் அழகாக நடித்திருக்கிறார். காதலியை பிரச்சனையிலிருந்து காப்பாற்ற போராடும் ஆக்ஷன் காட்சிகளில் அருமையாக அசத்தியிருக்கிறார்.

அருள்நிதியின் காதலி சசீலாவாக மகிமா. அருள்நிதியுடனான காதல் காட்சிகளின் மூலம் மனதை பறிக்கிறார். படத்தில் அழகு பதுமையாக காட்சியளிக்கிறார். அதே நேரத்தில், அஜ்மலை கண்டு மிரல்வது, பிறகு கன்னத்தில் அறைவது, போலீசில் அடி வாங்கி தப்பிப்பது என சில காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை கொஞ்சம் காட்டியிருக்கிறார்.

தற்போதைய காலத்துக்கு ஏத்த வில்லனாக அஜ்மல். தனது பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். வில்லன் கதாபத்திரத்திற்கு வலு சேர்த்துயிருக்கிறார். சாயா சிங், லஷ்மி ராமகிருஷ்ணன், ஆனந்த்ராஜ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், சுஜா வருணி என பல கேரக்டர்கள். ஆனால் அனைத்து கதாபாத்திரத்தை சுற்றி கதை பின்னபட்டிருக்கிறது.

ஆனந்த் ராஜ் சில இடங்களில் அடிக்கும் காமெடி சிரிக்க வைக்கிறது. “நாளைக்கு நீங்க இந்த மாதிரி நிலைமைல இருந்தீங்கன்னா, நான் கார்ல வந்து உங்களுக்கு லிஃபட் கொடுக்குறேன் சார். இது எங்க அக்கா மேல சத்தியம்” என்பது, அஜ்மலை பழிவாங்க சென்று பதறிப்போய் திரும்புவது என அவரது காமெடிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் கதையில் சின்ன ரிலாக்ஸ் தரும் விதத்தில் உள்ளது.

எழுத்தாளராக லட்சுமி ராமகிருஷணன் வரும் காட்சி கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கதையில் பல முடிச்சுகள். அதை ஒவ்வொன்றாக அவிக்கும் விதம் த்ரில்லிங்கான படத்தை படைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மு.மாறன். ட்விஸ்ட்டு மேலே ட்விஸ்ட்டு என ரசிகர்களை சற்று சலிப்பு ஏற்பட வைக்கிறது.

சாம் சி.எஸ் இசை படத்தின் த்ரில்லர் எபெக்டரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இரவு நேர காட்சிகளில் அரவிந்த சிங்கின் ஒளிப்பதிவு அருமை.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் த்ரில்லர் பார்வையாளர்களுக்கு செம விருந்து.