சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலா டிரெண்ட் சமூக வலைத்தளத்தில் உலக அளவில் இன்னும் 24 மணி நேரத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகவிருந்த அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோவை நாளை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதை அனிருத் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ‘காலா’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் ஸ்பெஷல் வீடியோ நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அனிருத் கூறியுள்ளார்