
பிக் பாஸ் சீசன் 2விலும் கலகலப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடந்து வருகிறது. சென்ட்ராயனை வைத்து யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத் உள்ளிட்டவர்கள் கலாய்த்தும் வருகின்றனா்.அதுபோல சண்டைக்கும் பஞ்சமில்லை. முதல் நாள் தலைவர் தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கை கொடுத்து பிக் பாஸ் தனது வேலையை ஆரம்பித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
நேற்று பிக் பாஸ் சீசன் 2வின் முதல் டாஸ்க் தொடங்கியது. அதை பொன்னம்பலம் வாசித்தார். வீட்டில் என்வெலப்புகள் ஒளித்து வைக்கப்படும் அதை தேடி எடுக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டின் முதல் வார தலைவராக போட்டியிடுவதில் கலந்து கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
பாஸர் ஒலி கேட்டவுடன் அனைத்து போட்டியாளர்களும் அதை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜனனி ஐயர், மகத் மற்றும் மும்தாஜ் வசம் என்வெலப்கள் கிடைத்தன. இதனால் அவர்கள் மூன்று பேரில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும். இதனால் அந்த மூன்று போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களிடம் எனக்கு வாக்கு போடுங்கள் என்று வாக்கு சேகரித்தனர்.
இந்த வாக்கு சேகரிக்கும் போட்டியில், ஜனனி தலைவராக பொறுப்பு ஏற்கும் தகுதி என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மேலும் மகத்தை விட எனக்கு தலைமை பொறுப்பு ஏற்கும் தகுதி அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார் ஜனனி. இதனை பார்த்த பார்வையாளர்கள் மத்தியில் தன்னை பற்றி பேசாமல் அடுத்தவர்களை புறம் பேசி வாக்கு சேகரித்த ஜனனியை கண்டு கோபம் தான் வந்தது. திரும்ப திரும்ப அந்த விசயத்தை கூறியதை பார்த்து கடுப்பாகி விட்டனார். ஏன் இப்படி கூறுகிறது இந்த பொண்ணு என்று தான் எண்ணம் ரசிகா்களிடையே ஏற்பட்டது.
ஆனால் மும்தாஜ் மிகவும் பொறுப்புடன் மற்ற இருவரும் சின்னப் பசங்க என்று கூறினார். இதனால் அவர் தன்மையுடன் நடந்து கொண்டார். அவர் சொல்வது போல ஜனனியும், மகத்தும் சின்ன வயசு உள்ளவார்கள் தான்.