Home சற்றுமுன் இரும்புத்திரை: பாதி விமர்சனம்

இரும்புத்திரை: பாதி விமர்சனம்

இரும்புத்திரை: பாதி விமர்சனம்

விஷாலின் இரும்புத்திரை திரைப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு பாதிப்படம் போட்டு காட்டியுள்ளதால் இந்த பாதி விமர்சனம்

ராணுவ அதிகாரியான விஷாலுக்கு கடன் வாங்குவதே பிடிக்காது. ஏனெனில் அவருடைய அப்பா டெல்லி கணேஷ் கடன் வாங்கியே குடும்பத்தை சிக்கலில் கொண்டு சென்றவர். இருப்பினும் தங்கையின் திருமணத்திற்காக வேறு வழியின்றி வங்கியில் ஒருசில பொய்களை கூறி ரூ.6 லட்சம் கடன் வாங்குகிறார். தனது அம்மா பெயரில் உள்ள சொத்தை ரூ.4 லட்சத்துக்கு விற்று மொத்தம் ரூ.10 லட்சத்தை சேர்த்து வங்கிக்கணக்கில் வைத்துள்ளார். ஆனால் இந்த பணம் திடீரென வங்கியில் இருந்து காணாமல் போகிறது. வங்கியில் பணம் காணாமல் போனதற்கு காரணமாக அந்த கொள்ளையன் யார்? விஷால் கண்டுபிடித்தாரா? அவருடைய தங்கை திருமணம் நடந்ததா? என்பதுதான் படத்தின் கதை

ராணுவ அதிகாரியாக விஷாலுக்கு ஒருசில நிமிடங்கள் காட்சி என்றாலும் அந்த காட்சிகளில் கம்பீரம் தெரிகிறது. அதேபோல் அநியாயங்களை கண்டு பொங்கும் ஒரு சிறந்த குடிமகனாகவும் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய ஆத்திரத்தினால் தனது மேலதிகாரி மனநல மருத்துவரை போய் பார்க்க, டாக்டர் சமந்தாவை பார்க்கும் விஷால் அவரிடம் ரொமான்ஸ் பேசுவதும் அழகுதான்.

சமந்தா இந்த படத்தில் கூடுதல் அழகாக உள்ளார். ஒரு மனோதத்துவ டாக்டருக்கான பொறுமை, புத்திசாலித்தனம் மற்றும் லேசான கிண்டல் ஆகியவற்றை தனது கண்களிலேயே காட்டும் அளவுக்கு அவருடைய நடிப்பில் மெச்சூரிட்டி அதிகரித்துள்ளது.

டெல்லி கணேஷின் அப்பாவித்தனம், ரோபோ சங்கரின் டைமிங் காமெடி ஆகியவை ரசிக்கும் வகையில் உள்ளது. இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் ஆக்சன் கிங் அர்ஜூன் அறிமுகமாகிறார் என்பதால் இவருடைய நடிப்பை இரண்டாம் பாதியில் தான் பார்க்க முடியும்

யுவனின் பின்னணி இசை சூப்பர். அதேபோல் பாடல்களிலும் அசத்தியுள்ளார். ஜார்ஜ் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. ரூபனின் படத்தொகுப்பு பக்காவாக உள்ளது.

இயக்குனர் மித்ரன், இண்டர்நெட்டில் நடக்கும் குற்றங்களை மெயின் கதையாக வைத்துள்ளார். அதற்கேற்ற காட்சியமைப்புகளும் கதையை சரியான கோணத்தில் வழிநகர்த்தி செல்ல உதவி செய்துள்ளது. முதல் பாதியில் ரொமான்ஸ், காமெடி, தங்கை செண்டிமெண்ட் என்று போகும் கதை இரண்டாம் பாதியில் ஜெட் வேகத்தில் ஆக்சனை நோக்கி செல்லும் என்று தெரிகிறது. மொத்தத்தில் இரும்புத்திரை ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம் மட்டுமின்றி ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க கற்று கொடுக்கும் ஒரு பாடம் என்பது குறிப்பிடத்தக்கது