அடல்ட் காமெடி படமான ‘ஹரஹர மகாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கும் அடுத்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. முதல் படம் போலவே இந்த படமும் அடல்ட் காமெடி படம் என்று சொல்லியே இயக்கி வருகிறார் இயக்குனர் சந்தோஷ்

இந்த நிலையில் இந்த படத்தில் ஃபோர்ன் ஆன்ந்தம்’ என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். பாடல் முழுவதும் இரட்டை அர்த்தத்துடன் கூடிய பச்சை பச்சையான வரிகளுடன் உள்ளது. குறிப்பாக ‘நைட்டு புல்லா ஒர்க் அவுட் பண்ணி வத்தி போச்சு தண்ணி தண்ணி’ போன்ற வரிகள் முகம் சுளிக்க வைக்கின்றன

இந்த படத்திற்கு குடும்பத்துடன் வரவேண்டாம் என்று சொல்லியே இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர்.