Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி படம் வெற்றி பெற்றதை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அதே டீம் இணைந்து மீண்டும் இரட்டை அர்த்த வசனம் உள்ள படத்தை கொடுத்திருக்கிறது. இதில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, பாலசரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், யாஷிகா ஆனந்த், சாரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பிளேபாயாக வலம் வரும் கௌதம் கார்த்திக் பல பெண்களை காதலித்து வருகிறார். அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி வருகின்றனர். அவருக்கு அவ்வளவு எளிதில் பெண் கிடைக்காமல் திண்டாடுகின்றனா். எங்கு சென்றாலும் அவர் காதலித்த பெண்களின் தோழிகளாக பலரும் இருப்பதால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. அந்த பெண்கள் அவரை திருமணம் செய்து
கொள்ள மறுத்து விடுகின்றனர்.

இறுதியில் வைபவி சாண்டில்யாவை பெண் பார்க்க செல்கின்றனர். எப்படியோ அவர் கௌதம் காரத்திக்கை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். கௌதம் காரத்திக் பற்றி தெரிந்து இருந்த போதும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் அவரது அப்பா மாப்பிள்ளைக்கு சில டெஸ்டக்களை வைத்து அதன் பின் தான் முடிவு செய்ய முடியும் என்கிறார். ஒரு பெண்ணை திருப்திப்படுத்தும் மாப்பிள்ளை தான் வேண்டும் அதனால், இருவரும் தனியாக பேசி பழகி அதன் பின் முடிவு எடுக்க வேணடும் என்று முடிவு எடுக்கிறார்.

எனவே அந்த கண்டிஷன் நிறைவேற்றும் பொருட்டு நாயகி வைபவியுடன் கௌதம் கார்த்திக் தாய்லாந்து செல்கிறார். நாயகனுடன் அவரது நண்பன் சாராவும், அவருடைய காதலி உள்ளிட்ட நான்கு பேரும் தாய்லாந்து செல்கின்றனர். அங்கு ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். ஏற்கனவே நாயகன் காதலித்த பெண் தான் சாராவின் காதலியான யாஷிகா ஆனந்த். இவருக்கு நாயகன் மீது ஒரு கண். எப்படியாவது கௌதமை அடைத்து விட வேண்டும் என்று எண்ணத்துடன் இருக்கிறார்.

இதில் கௌதமும், அவரது நண்பன் சாராவும் ஒரே ரூம் தங்கி இருக்கிறார்கள். அதுபோல சாராவின் காதலியும், வைபவியும் வேறு ஒரு அறையிலும் தங்கி இருக்கிறார்கள். இதனால் தங்களுடைய காதலிகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் இந்த பங்களாவில் பேய் இருக்கிறது என்று பொய் சொல்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அந்த வீட்டில் பேய் குடிகொண்டிருக்கிறது தெரிய வருகிற வருகிறது. இதில் இரண்டு பெண்களும் தப்பித்து சென்று விடுகின்றனர். நாயகனும், அவரது நண்பனான சாராவும் அங்கிருந்து செல்ல விடாமல் அந்த பேயை தடுக்கிறது. இந்நிலையில் அந்த பேய் எனக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறது.

இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இறந்துவிட்டதாகக் கூறி தன்னை திருப்திபடுத்த நல்ல ஆண்மகனை தேடிக் கொண்டிருந்ததாக கூறுகிறது. மேலும் இருவரில் ஒருவர் தன்னுடன் உடலுறவுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்றும் கூறுகிறது. அந்த ஆசைய நீங்க தான் தீர்த்து வைக்கனும்” என்று கூறுவதோடு, என்னோடு ஒன்றாக இருந்தால் நீங்க செத்துடுவிங்க. என்ற பெரிய குண்டை தூக்கி போடுகிறது.

இப்படி இருக்க அந்த பங்களாவை விட்டு வெளியேறவும் முடியாமல், பேயுடன் ஒன்றாக இருக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனா். இதற்கிடையில் அந்த பேய் பங்களாவில் நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், கருணாகரன் என்று மேலும் சிலர் வந்து சிக்கிக்கொள்ளகின்றனா். அப்படி மாட்டிக்கொண்ட அவர்களையும் வச்சி செய்ய நினைக்கும் பேயின் காம பசிக்கு இவர்கள் பலி ஆனார்களா? அல்லது அங்கிருந்து கவுதம், சாரா இருவரும் அந்த பேயிடம் இருந்து தப்பித்தார்களா?என்பது தான் படத்தின் கதை.

படத்தின் டைட்டில் கார்டு போடுவதற்கு முன் தயவு செய்து டிஸ்யூ பேப்பர் எடுத்துட்டு உள்ளே வாங்க என்றும் வாயும் கையும் துடைக்க யூஸ் ஆகும் என்று ஒரு ஸ்லைட் போடுகிறார்கள். படம் முழுக்க வைத்து செஞ்சி இருக்கிறார் இயக்குனர்.

வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று  நாயகிகள் இருந்தாலும் அதில் அதிகம் கவர்ச்சி மழையை கொட்டியது மற்ற இரு நாயகிகள் தான். வைபவி சாண்டில்யா கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தாலும், மற்றவா்கள் சற்று தூக்கலாக தான் காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார்கள். பிளேபாயாக கௌதம் கார்த்திக் வாழ்ந்து இருக்கிறார்கள். வளர்ந்து வரும் இந்நிலையில் இப்படியொரு படத்தில் நடித்திருப்பது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது.