பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சிம்பு நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘இருட்டு’.

இப்படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இதில் சுந்தர்.சி போலீஸாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்ஷி சௌத்ரி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, விமலா ராமன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஹாரர் ஜானரில் உருவாகும் இதனை ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது, இந்த படத்தின் மிரட்டலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

-சிவா விஷ்ணு