அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் திடீரென டுவிட்டரில் இந்த படம் டிராப் என வதந்தி பரவி வருகிறது.

இயக்குனர் சிவாவின் போலி டுவிட்டர் பக்கத்தில் விசுவாசம் படம் டிராப், சாரி தல ரசிகர்களே’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனர் சிவாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்தே இந்த படம் டிராப் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.

ஆனால் இவையனைத்தும் வதந்தியே என்றும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.