நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் திடீரென ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

இந்த படத்தில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கதைப்படி ஜோடி இல்லை. இப்படித்தான் கதை சொல்லி நயன்தாராவை நடிக்க சம்மதிக்க வைத்தனர்.

ஆனால் தற்போது திடீரென நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கவிருப்பதாகவும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வரும் என்று கூறப்படுகிறது. இதற்கு நயன்தாரா ஒப்புக்கொண்டாரா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி