தமிழ் திரையுலகமே தலையில் வைத்து கொண்டாடி வரும் படம் ‘அருவி’. இந்த படம் 100 வருட தமிழ் சினிமாவின் பெருமை என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படமும் ஒரு வெளிநாட்டு படத்தை பார்த்து உருவி எடுத்ததுதான் என்ற விமர்சனம் வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அருவி படத்தில் நடிக்க மறுத்த இரண்டு பிரபல நடிகைகள் யார்?

அரபு மொழியில் அஸ்மா என்ற பெயரில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் கதையும், அருவியின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதாக டுவிட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார். அஸ்மா படத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாயகிக்கு ஒரு ஆபரேசன் நடக்கவிருக்கும் நிலையில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக மருத்துவரிடம் கூறுவார், அதன் பின் ஏற்படும் பிரச்சனைதான் அந்த படத்தின் கதை

இதையும் படிங்க பாஸ்-  'அருவி'யில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்?

இருப்பினும் ‘அஸ்மா’வை தமிழுக்கு ஏற்றாற்போல் திரைக்கதையை மாற்றி ‘அருவி’யாக எடுத்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் என்றும் அந்த டுவிட்டர் பயனாளி தெரிவித்துள்ளார்.