அட்லி இயக்கிய மூன்று படங்களுமே வசூல் அளவில் நன்றாக ஓடியபோதிலும், மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்று ஊடகங்கள் மட்டுமின்றி திரையுலகினர்களே கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘மெர்சல்’ நன்றாக ஓடியபோதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இனிமேல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் ‘பாகுபலி ‘நாயகன் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,. இது எந்த படத்தின் காப்பி என்பதை படம் உறுதியானதும் அனேகமாக தெரிந்துவிடும்