கடந்த சில நாட்களாகவே காயத்ரி ரகுராம் குறித்து ஒருசில வதந்திகள் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அவற்றில் ஒன்று காயத்ரி கைது செய்யப்பட்டார் என்பதுதான்

இந்த நிலையில் இதுகுறித்து காயத்ரி தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

இதையும் படிங்க பாஸ்-  பூட்டை உடைக்க வந்த விஷால் ; தடுக்கும் போலீசார் - தி.நகரில் பதட்டம்

நான் கைது செய்யப்பட்டதாக தவறான வதந்தி பரவி இருக்கிறது. கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் பா.ஜனதா கட்சியில் இருக்கும் காரணத்தால் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள். எனக்கு குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை பற்றிய தவறான வதந்தி அவர்களையும் காயப்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதை செய்யவிடாது. மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நானும் நம்பிக்கையை இழந்து விட்டேன்

இதையும் படிங்க பாஸ்-  என்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்