நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவது தெரிந்ததே. விக்னேஷ் சிவன் இயக்கி வந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நெருங்கிய உறவினர்களுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி கோவிலில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கி வந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கே இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.