விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வரும் நிலையில் அன்மையில் நடந்த விருது வழங்கும் விழாவிலும் அதிகளவில் கவனிக்கப்படும் நபர்களாக இருந்தனர்.

ஏற்கனவே தனது காதலருக்காகத் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தினைத் நயந்தாரா தயாரிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அந்தப் படத்தினைச் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. தற்போது மிண்டும் இதயம் முரளி திரைப்படத்தினை விகேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அதில் அதர்வா நாயகனாக நடிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவனும் அந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தது.

இதனை நயந்தாரா மறுத்தத்துடன் இந்தச் செய்திகளில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் அதர்வாவுடன் தான் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், விக்னேஷ் சிவன் பத்திரிக்கை ஒன்றுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தான் திரைப்படத்தில் நடிப்பதாகச் செய்தியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நயந்தாரா தற்போது கோலமாவு கோகிலா, சே ரா நரச்சிமா ரெட்டி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.