‘தேவர் மகன்’ படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக திரைத்துரையில் கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து ‘குட்டி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, பாண்டவர் பூமி’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களிலும், ’வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையனை பூக்கள்’ உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.

           சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் விடிவெள்ளியாக திகழ்ந்த அவர் தனது 20 வருட கலைப்பயணத்தின் அடுத்தகட்ட முயற்ச்சியாக தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கி இருக்கிறார். இசை பிக்சர்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம், பிரபல தனியார் தமிழ் தொலைகாட்சிக்காக “நிறம் மாறாத பூக்கள்” என்ற நெடுந்தொடரை தயாரிக்கிறது.

          இதில் முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்..நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற என்னுடைய 20 வருட கனவு இன்று நிஜமாகி விட்டது. சின்னத்திரையில் தயாரிப்பாளராக உருவெடுத்த நாங்கள் இனி பெரிய திரையிலும் தயரிப்பாளராக கால் பதிப்போம் என்கிறார்கள் நீலிமாவும் அவரது கணவர் இசைவாணன் இருவரும்.