கணவரை விவாகரத்து செய்தாரா ‘சிவகாமி’ ரம்யாகிருஷ்ணன்?

பாகுபலி மற்றும் பாகுபலி 2′ ஆகிய இரண்டு படங்களிலும் ராஜமாதா சிவகாமி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக ரூ.3 கோடி கிடைத்தது மட்டுமின்றி வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமா, தமிழ் நெடுந்தொடர் என சென்னையில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதால் அவர் ஐதராபத்தில் இருந்து தற்போதைக்கு சென்னையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் மகனுடன் உள்ளார். அதேபோல் ரம்யா கிருஷ்ணனின் கணவரும் இயக்குனருமான வம்சிகிருஷ்ணன் தெலுங்கு படங்களில் பிசியாக இருப்பதாக ஐதராபாத் வீட்டில் உள்ளார்

ஆனால் இதைவைத்து ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து செய்துவிட்டதாகவும், மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் சிலர் கதைகட்டி விட்டனர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ரம்யாகிருஷ்ணன், ‘நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடும் வயதில் இல்லை. எங்கள் இருவருக்கும் எதிர்காலக் கடமைகள் இருக்கின்றன. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவரிடையே நல்ல புரிதல் இருக்கிறது. நாங்கள் இருவருமே ஒருவரது வேலையை மற்றவர் புரிந்து கொண்டு மனமுவந்து விட்டுக் கொடுத்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது திருமண வாழ்க்கை முறிந்து விட்டது என்பதெல்லாம் வதந்தி’ என்று கூறியுள்ளார்.