சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்புவது கோலிவுட் திரையுலகில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. நயன்தாரா, ஹன்சிகா என சிம்புவின் காதல் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக ஓவியாவும் சிம்புவும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுநம்ம ஆளு’ படத்தின் ஸ்டில்லில் நயன்தாராவின் தலையை எடுத்துவிட்டு ஓவியாவின் தலையை ஒட்டியுள்ளார் ஒரு நெட்டிசன்.

அதிலும் போட்டோஷாப் தொழிலுக்கு புதுசுபோல, எல்கேஜி குழந்தை கூட இது மார்பிங் செய்த போட்டோ என்று கூறும் வகையில் ஒரு புகைப்படத்தை தயார் செய்து வைரலாக்கியுள்ளார். இது போலி புகைப்படம் என்று தெரிந்தே பலர் இந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்