பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதை அடுத்து இன்று புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டது. எஸ்.கே.13 என்று தற்போது தொடங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தினை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கவிருக்கிறார். எஸ்.கே 17 படத்தில் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு நடிகை இஷா கோபிகர் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

சிவகார்த்திகேயன் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் அந்த படத்தினை இயக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

இன்று பூஜை போட்டப்பட்ட சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ரகுல் ப்ரீத்திசிங், யோகிபாபு, விஜய் டிவி புகழ் கோதண்டம், பானுப்ரியா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார்.

தற்போது இந்த படத்தில் புதியதாக ஒருவர் இணையவிருக்கிறார். அரவிந்தசாமியுடன் என் சுவாச காற்றே படத்தில் நடித்த இஷா கோபிகர் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். இந்த படத்தின் மூலம் 17 வருடகள் பிறகு நடிக்க உள்ளார். இவர் பிரசாந்துடன் காதல் கவிதை, விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.