எந்திரன் 2வில் ஜஸ்வா்யாராய்! ஷங்காின் புதிய டெக்னிக்

சினிமாவில் நடிகைகள் திருமணம் ஆக செட்டிலான பிறகு நடிப்பு என்பது கொஞ்சம் கஷ்டம் தான். அப்படியே நடிக்க வந்தாலும் அக்கா, அண்ணி வேடம் தான் கிடைக்கும். நாயகி என்ற அந்தஸ்து என்பது ரொம்ப ரொம்ப அபூா்வமாக தான்  அந்த வாய்ப்பு அமையும். ரசிகா்கள் மனசும் நாயகியாக ஏற்றும் கொள்ளும் நிலையில் இல்லை என்றே தான் கூற முடியும்.  அந்த வகையில் முன்னாள் உலக அழகி ஜஸ்வா்யாராய் என்றாலே ஒல்லியான உடல்வாகு தான் அனைவருக்கும் நினைவில் வரும். தற்போது திருமணம் ஆகி விட்டதால் அவருக்கும் இந்த நிலைமை தான். இதனால் பிரம்மாண்ட இயக்குநரான மணிரத்னம் போன்ற இயக்குநா்கள் கூட ஜஸ்வா்யா ராய்க்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து படத்தில் நடிக்க வைக்காமல் ரெஸ்ட் கொடுத்துள்ளனா். எந்திரன் 1ல் படம் முழுவதும் ஜஸ்வா்யா ராய் வருவாா். தற்போது சங்கா் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் எந்திரன் 2 தயாராகி வருகிறது.  எந்திரன் பாா்ட் 2வில் எப்படி ஜஸ்வா்யாராய் படம் முழுவதும் இணைப்பது என்பதில் தான் பிரம்மாண்ட இயக்குநா் ஷங்கா் நிற்கிறாா்.

எந்திரன் பாா்ட் 1ல் ஜஸ்வா்யாராய்க்கு தமிழில் டப்பிங்க பேசின பெண்மணியை வைத்து, விஞ்ஞானி வசீகரனிடம் போனில் பேசியபடி படத்தை அமைக்க முடிவெடுத்துள்ளாா் இயக்குநா் ஷங்கா். இதனால் படம் முழுவதும் ஜஸ்வா்யாராய் முகத்தை காட்டாமல் இப்படியொரு டெக்னிக்கை பயன்படுத்த உள்ளாா்களாம்.

எந்திரன் பாா்ட் 1ல் ஆண் ரோபோவை உருவாக்குவாா் ரஜினி. எந்திரன் பாா்ட் 2வில் பெண் ரோபோவை உருவாக்குவாராம். வசீகரன் உருவாக்கும் இந்த பெண் ரோபோ தான் எமிஜாக்ஸன். இந்த பெண் எமிஜாக்ஸன் ரோபோ பெயா் நிலா.

எந்திரன் 1ல் எப்படி சிட்டி ஜஸ்வா்யா ராய்வை காதலிக்க ஆரம்பித்த காரணத்தால் பிரச்சனைகள் ஏற்படும். அதுபோல் எந்திரன் பாா்ட் 2வில் பெண் ரோபோவான நிலாவால் நிகழ போகும் பிரச்சனைகள் பற்றி தான் படம். இருந்தாலும் ஜஸ்வா்யா, வசீகரனான ரஜினியிடம் போனில் பேசுவது போல வந்தாலும்,  அவரை எப்படியாவது படத்தில் ஒரு சில காட்சிகளில் குளோஸ் அப்பிலாவது காட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் இயக்குநா் ஷங்கா்.