ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் நடைபெறும் விழாவில், நடனமாடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8ம் தேதி, உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய கலாச்சாரத்தி உலகுக்கு பறை சாற்றும் வகையிலும், இந்திய நாட்டு கலைகளில் ஒன்றான பரத நாட்டியம் ஐ.நா சபையில் அரங்கேற்றப்படவுள்ளது. இந்த நடன நிகழ்ச்சி சுமார் 45 நிமுடம் முதல் 1 மணி நேரம் வரை நடக்கவுள்ளது.

இதில், மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி உலக பெண்களின் மகத்துவத்தையும், கவிஞர் வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில், இன்றைய அவசர உலகத்தில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் மேன்மை குறித்தும் நாட்டியம் மூலம் தெரிவிக்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

இதன் மூலம், ஐ.நா. சபையில் நடனமாடும் முதல் பெண் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார்.