மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…?

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் எனத் தெரிகிறது.

மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அவரின் இயக்கத்தில் குரு மற்றும் ராவணன் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின், சில பாலிவுட் படங்களில் மட்டும் அவர் நடித்தார்.

காற்று வெளியிடை படத்திற்கு பின் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவேளை ஐஸ்வர்யா ராய் சம்மதம் தெரிவித்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மணிரத்னம் இயக்கும் இரண்டு படங்களில் அவர் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் உலா வருகிறது.