நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

காக்கா முட்டை படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் அவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் மலையாள நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சகாவு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அப்படத்தின் புரோமோஷன் தொடர்பான சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் கேரளாவில் இருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையோரத்தில் இருந்த ஒரு விளம்பர பேனரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே காரை நிறுத்தி, அதை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கேரளாவில் பார்த்தேன். இந்த பெண் அப்படியே என்னைப் போலவே இருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.